திருவருட்பா
முதல் திருமுறை
காப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
2. ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
பாடாண் திணை
கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
(வினா உத்தரம்)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3. திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
4. தண்ணார் மலரை மதிநதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
னண்ணா லொற்றி யிருந்தவரே யைய ரேநீர் யாரென்றே
னண்ணா ரிடத்து மம்பலத்து நடவா தவர்நா மென்றுசொலி
யெண்ணா தருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
5. பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி
யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
6. மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா
னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன்
கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
7. மன்றன் மணக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா
னின்றன் பொடுங்கை யேந்தனத்தை யேற்றோர் கலத்திற் கொளுமென்றே
னன்றன் புடையா யெண்கலத்தி னாங்கொண் டிடுவே மென்றுசொலி
யென்றன் முலையைத் தொடுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
8. கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத
மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்
தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை
யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
9. அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
10. கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
11. ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
12. அடுத்தார்க் கருளு மொற்றிநக ரைய ரிவர்தா மிகத்தாகங்
கடுத்தா மென்றார் கடிதடநீர் கண்டீ ரையங் கொளுமென்றேன்
கொடுத்தாய் கண்ட திலையையங் கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை
யெடுத்தாற் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
13. இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
14. தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
15. மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
16. வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
17. திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
18. முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
19. துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
20. சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
21. நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ
திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் தீரென் றேனின் னடுநோக்காக்
குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் குடம்யா தென்றே னஃதறிதற்
கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
22. சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
23. துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
24. உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
25. மணங்கே தகைவான் செயுமொற்றி வள்ளலிவரை வல்விரைவேன்
பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் பிணங்கா விடினு நென்னலென
வணங்கே நினக்கொன் றினிற்பாதி யதிலோர் பாதி யாகுமிதற்
கிணங்கேஞ் சிறிது மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
26. ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ
திற்றென் றறிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரன்றியஃ
தெற்றென் றறிவா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
27. கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
28. சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
29. துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
30. ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
31. திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
32. வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்
குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்
களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ
திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
33. பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே
னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா ருண்டோ நீண்டமலையென்றேன்
வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த மலைகா ணதனின் மம்முதல்சென்
றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
34. வயலா ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் வாய்திறவார்
செயலார் விரல்கண் முடக்கியடி சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
மயலா ருளத்தோ டென்னென்றேன் மறித்தோர் விரலா லென்னுடைய
வியலார் வடிவிற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
35. பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச்
சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
36. பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
37. வலந்தங் கியசீ ரொற்றிநகர் வள்ள லிவர்தாம் மௌனமொடு
கலந்திங் கிருந்த வண்டசத்தைக் காட்டி மூன்று விரனீட்டி
நலந்தங் குறப்பின் னடுமுடக்கி நண்ணு மிந்த நகத்தொடுவா
யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
38. தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
39. செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய்
மெச்சு மொருகாற் கரந்தொட்டு மீண்டு மிடற்றக் கரம்வைத்தார்
பிச்ச ரடிகேள் வேண்டுவது பேசீ ரென்றேன் றமைக்காட்டி
யிச்சை யெனையுங் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
40. மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு
நின்றா ரிருகை யொலியிசைத்தார் நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார்
நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தா ரியாவு மையமென்றே
னின்றா மரைக்கை யேந்துகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
41. வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
42. செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
43. கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
44. பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனித ரிவரூ ரொற்றியதா
முன்னைத் தவத்தா லியாங்காண முன்னே நின்றார் முகமலர்ந்து
மின்னிற் பொலியுஞ் சடையீரென் வேண்டு மென்றே னுணச்செய்யா
ளின்னச் சினங்கா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
45. வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான்
செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று
மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
46. பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
47. இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொலுமென்றேன்
பட்டுண் மருங்குற் பாவாய்நீ பரித்த தன்றே பாரென்றே
யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
48. பாற்றக் கணத்தா ரிவர்காட்டு ப் பள்ளித் தலைவ ரொற்றியினின்
றாற்றப் பசித்து வந்தாரா மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
யேற்றுக் கிடந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
49. குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
50. வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
51. உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
52. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
யெண்கார் முகமாப் பொன் னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே
யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
53. செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
54. விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென
வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
55. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றே
னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா மிசைத்தே மென்றா ரெட்டாக
வுட்டா வுறுமவ் வெழுத்தறிய வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
கிட்டார் நாம மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
56. ஒற்றி நகரீர் மனவசிதா னுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுள்ள வன்மையெலா
மெற்றி லுணர்தி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
57. வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
58. தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றே
னீது நமக்குத் தெரிந்ததென்றா ரிறையா மோவிங் கிதுவென்றே
னோது மடியார் மனக்கங்கு லோட்டு நாமே யுணரன்றி
யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
59. ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா
ரெண்கணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென்
றெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
60. ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
61. பேரா ரொற்றி யீரும்பைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
62. தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைக்க வாழ்வீர் தனிஞான
வொளி நா வரசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
களிநா வலனை யீரெழுத்தாற் கடலின் வீழ்த்தி னேமென்றே
யெளியேற் குவப்பின் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
63. ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே
யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
64. மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா
ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா
யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
65. வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
66. வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
67. புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
யியற்பான் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
68. தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே
யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
69. உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே
யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
70. ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
71. வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே
னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது
வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன்
றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
72. மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென்
றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே
யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
73. தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை
மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே
னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
74. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற்
பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே
லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ
தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
75. வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன்
மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார்
செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
76. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன்
காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென்
றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
77. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
78. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருடையீர் யார்க்கு முணர்வரியீ
ரென்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றேன்யான்
றுன்றும் விசும்பே காணென்றார் சூதா முமது சொல்லென்றே
னின்றுன் முலைதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
79. வானார் வணங்கு மொற்றியுளீர் மதிவாழ் சடையீர் மரபிடைநீர்
தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்கா
ணானா லொற்றி யிருமென்றே னாண்டே யிருந்து வந்தனஞ்சே
யீனா தவ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
80. பற்று முடித்தோர் புகழொற்றிப் பதியீர் நுமது பசுவினிடைக்
கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதுங் காணென்றேன்
மற்று முடித்த மாலையொடுன் மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
திற்று முடித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
81. வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது
மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே
யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே
யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
82. ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா
லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே
னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
83. கருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப்
பெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார்
தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா
லிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
84. ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே மயக்குகின்ற
வசியர் மிகநீ ரென்றேனெம் மகன்கா ணென்றார் வளர்காமப்
பசிய தொடையுற் றேனென்றேன் பட்ட மவிழ்த்துக் காட்டுதியே
லிசையக் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
85. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணைவீர்
மலையா ளுமது மனையென்றேன் மருவின் மலையா ளல்லளென்றா
ரலையாண் மற்றை யவளென்றே னறியி னலையா ளல்லளுனை
யிலையா மணைவ தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
86. சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர்
சூலம் படைத்தீ ரென்னென்றேன் றோன்று முலகுய்ந் திடவென்றா
ராலங் களத்தீ ரென்றேனீ யாலம் வயிற்றா யன்றோநல்
லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
87. ஞால நிகழும் புகழொற்றி நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
பால ரலவோ வென்றேனைம் பாலர் பாலைப் பருவத்திற்
சால மயல்கொண் டிடவருமோர் தனிமைப் பால ரியாமென்றே
யேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
88. வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
89. தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
90. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய
பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே
னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
91. கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர்
தனிமா னேந்தி யாமென்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும்
பனிமா னேந்தி யாமென்றார் பரைமான் மருவி னீரென்றே
னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
92. சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
93. அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி
வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன்
விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
94. வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
95. பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களெலாங்
கூசும் படியிப் படியொற்றிக் கோவே வந்த தென்னென்றேன்
மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருனை
யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
96. கொடியா லெயில்சூ ழொற்றியிடங் கொண்டீ ரடிகள் குருவுருவாம்
படியா லடியி லிருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரென்றேனின்
மடியா லடியி லிருந்தமறை மாண்பை வகுத்தா யெனிலதுநா
மிடியா துரைப்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
97. என்னே ருளத்தி னமர்ந்தீர்நல் லெழிலா ரொற்றி யிடையிருந்தீ
ரென்னே யடிகள் பலியேற்ற லேழ்மை யுடையீர் போலுமென்றே
னின்னே கடலி னிடைநீபத் தேழ்மை யுடையாய் போலுமென
வின்னே யங்கொண் டுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
98. நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
99. மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்
பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா
யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
100. ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோவென்றே
னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ
பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
101. விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன்
பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா
லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
102. விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர் விளங்குந் தாம மிகுவாசத்
தண்ணார் மலர்வே தனையொழிக்கத் தருதல் வேண்டு மெனக்கென்றேன்
பண்ணார் மொழியா யுபகாரம் பண்ணாப் பகைவ ரேனுமிதை
யெண்ணா ரெண்ணா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
103. செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி
யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன்
வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே
யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
104. மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன்
கைக்க ணிறைந்த தனத்தினுந்தந் கண்ணி னிறைந்த கணவனையே
துய்க்கு மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கீ தறிந்திலையோ
வெய்க்கு மிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
105. ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்
மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே
னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன்
றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
106. வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்
வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்
னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
107. உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன்
மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை
யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
108. அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப்
பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே
யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
109. அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி
வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
110. விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் வியந்தீர் வியப்பென் னிவணென்றேன்
கஞ்ச மிரண்டு நமையங்கே கண்டு குவிந்த விரிந்திங்கே
வஞ்ச விருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தா
மெஞ்ச லறநா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
111. அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே
னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின்
னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத்
தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
112. விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம்
பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே
னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள்
ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
113. படையம் புயத்தோன் புகழொற்றிப் பதியீ ரரவப் பணிசுமந்தீர்
புடையம் புயத்தி லென்றேன்செம் பொன்னே கொடையம் புயத்தினுநன்
னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ நானா வரவப் பணிமற்று
மிடையம் பகத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
114. கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
115. புயல்சூ ழொற்றி யுடையீரென் புடையென் குறித்தோ போந்ததென்றேன்
கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் காண லிரப்போ ரெதற்கென்றார்
மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத் திலையென்ற
லியல்சூ ழறமன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
116. நடவாழ் வொற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழகென்றேன்
மடவா யதுநீர் நாகமென மதியே லயன்மான் மனனடுங்க
விடவா யுமிழும் படநாகம் வேண்டிற்காண்டி யென்றேயென்
னிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
117. கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன்
வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப்
பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே
மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
118. நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
119. மதிலொற் றியினீர் நும்மனையாண் மலையின் குலநும் மைந்தருளோர்
புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள்
ளிதுமற் றொருத்திக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
120. தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப்
பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே
னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
121. அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ ரகில மறிய மன்றகத்தே
மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் வனப்பா மென்றே னுலகறியத்
தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ தானுந் தகரத் தலைகொண்டா
யினஞ்சூ ழழகா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
122. பங்கே ருகப்பூம் பணையொற்றிப் பதியீர் நடுவம் பரமென்னு
மங்கே யாட்டுக் காலெடுத்தீ ரழகென் றேனவ் வம்பரமே
லிங்கே யாட்டுத் தோலெடுத்தா யாமொன் றிரண்டு நீயென்றா
லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
123. மாணப் புகழ்சே ரொற்றியுளீர் மன்றார் தகர வித்தைதனைக்
காணற் கினிநான் செயலென்னே கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன்
வேணச் சுறுமெல் லியலேயாம் விளம்பு மொழியவ் வித்தையுனக்
கேணப் புகலு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
124. நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
125. ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல
வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்
றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
126. ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
127. இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன்
தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார்
விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின்
னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
128. உடையா ரென்பா ருமையொற்றி யுடையீர் பணந்தா னுடையீரோ
நடையா யேற்கின் றீரென்றே னங்காய் நின்போ லொருபணத்தைக்
கடையா ரெனக்கீழ் வைத்தருமை காட்டேம் பணிகொள் பணங்கோடி
யிடையா துடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
129. என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு
நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன்
முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர்
விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
130. பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
131. செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் திகழாக் கரித்தோ லுடுத்தீரே
யும்மை விழைந்த மடவார்க ளுடுக்கக் கலையுண் டோவென்றே
னெம்மை யறியா யொருகலையோ விரண்டோ வனந்தங் கலைமெய்யி
லிம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
132. கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவ லுடையீ ரீங்கடைந்தீ
ரிற்றைப் பகலே நன்றென்றே னிற்றை யிரவே நன்றெமக்குப்
பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத
மிற்றைக் களித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
133. கற்றீ ரொற்றீர் முன்பொருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
வீற்றீ ரின்றென் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத்
திற்றீ தணிந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
134. உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு
முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி
யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
135. காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று
தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன்
பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
136. ஊட்டுந் திருவா ழொற்றியுளீ ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத்
தாட்டுந் திறத்தீர் நீரென்றே னணங்கே யிருசெப் பிடையாட்டுந்
தீட்டும் புகழன் றியுமுலகைச் சிறிதோர் செப்பி லாட்டுகின்றா
யீட்டுந் திறத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
137. கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
வந்த வெமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ்
சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் தகுநான் கொன்றுந் தானடைந்தா
யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
138. ஆழி விடையீர் திருவொற்றி யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான்
வீழி யதனிற் படிக்காசு வேண்டி யளித்தீ ராமென்றேன்
வீழி யதனிற் படிக்காசு வேண்டா தளித்தா யளவொன்றை
யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
139. உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
140. யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
141. கருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசெவ்
வருணப் பொருப்பே வளரொற்றி வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்
தருணப் பருவ மிஃதென்றேன் றவிரன் றெனக்காட் டியதுன்ற
னிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
142. காவிக் களங்கொள் கனியேயென் கண்ணுண் மணியே யணியேயென்
னாவித் துணையே திருவொற்றி யரசே யடைந்த தென்னென்றேன்
பூவிற் பொலியுங் குழலாய்நீ பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன்
னீவைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
143. கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர்
நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
144. தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி
யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி
லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
145. அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
146. உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று
கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு
மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
147. வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர் வளஞ்சே ரொற்றி மாநகரீர்
குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் கொண்டீர் கொள்கை யென்னென்றே
னணங்கே யொருபா லன்றிநின்போ லைம்பா லிருள்கொண் டிடச்சற்று
மிணங்கே மிணங்கே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
148. கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர்
பெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே
னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ
ரிரும்பொ னிலையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
149. நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன
மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன்
வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ
திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
150. உதயச் சுடரே யனையீர்நல் லொற்றி யுடையீ ரென்னுடைய
விதயத் தமர்ந்தீ ரென்னேயென் னெண்ண மறியீ ரோவென்றேன்
சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
மிதையுற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
151. புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை
யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன்
கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
152. பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் பசுவி லேறும் பரிசதுதான்
விதங்கூ றறத்தின் விதிதானோ விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே
னிதங்கூ றிடுநற் பசுங் கன்றை நீயுமேறி யிடுகின்றா
யிதங்கூ றிடுக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
153. யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந்
தாக முடையா ரிவர்தமக்குத் தண்ர் தரநின் றனையழைத்தேன்
போக முடையாய் புறத்தண்ர் புரிந்து விரும்பா மகத்தண்
ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
154. வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
155. மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
ரந்நீ ரிலைநீர் தண்ர்தா னருந்தி லாகா தோவென்றேன்
முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற்
றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
156. சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர் சிறிதாம் பஞ்ச காலத்துங்
கோலஞ் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவீ ரென்னென்றேன்
காலம் போகும் வார்த்தைநிற்குங் கண்டா யிதுசொற் கடனாமோ
வேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
157. ஊற்றார் சடையீ ரொற்றியுளீ ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர்
நீற்றால் விளங்குந் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன்
சோற்றா லிளைத்தே மன்றுமது சொல்லா லிளைத்தே மின்றினிநா
மேற்றா லிகழ்வே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
158. நீரை விழுங்குஞ் சடையுடையீ ருளது நுமக்கு நீரூருந்
தேரை விழுங்கும் பசுவென்றேன் செறிநின் கலைக்கு ளொன்றுளது
காரை விழுங்கு மெமதுபசுக் கன்றின் றேரை நீர்த்தேரை
யீர விழுங்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
159. பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே
னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன்
மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு
மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
160. அடையார் புரஞ்செற் றம்பலத்தே யாடு மழகீ ரெண்பதிற்றுக்
கடையா முடலின் றலைகொண்டீர் கரமொன் றினிலற் புதமென்றே
னுடையாத் தலைமேற் றலையாக வுன்கை யீரைஞ் ஞாறுகொண்ட
திடையா வளைக்கே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
161. தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
162. கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ
யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
163. புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
164. தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் தேவர் தமைநா னீரிருத்த
லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே யேழூர் நாலூ ரென்றார்பின்
னவ்வூர்த் தொகையி னிருத்தலரி தாமென் றேன்மற் றதிலொவ்வூ
ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
165. மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேனின்
குணங்கொண் மொழிகேட் டோரளவு குறைந்த குயிலாம் பதியென்றா
ரணங்கின் மறையூ ராமென்றே னஃதன் றருளோத் தூரிஃது
மிணங்க வுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
166. ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
167. ஓங்குஞ் சடையீர் நெல்வாயி லுடையே மென்றீ ருடையீரேற்
றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே
னேங்கும் படிநும் மிடைச்சிறுமை யெய்திற் றலதீண் டெமக்கின்றா
லீங்குங் காண்டி ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
திருச்சிற்றம்பலம்
1. ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கித்
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகிக்
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின்
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம்.
2. திரு ஆர் கமலத் தடம் பணை சூழ் செல்வப் பெருஞ் சீர் ஒற்றியில் வாழ்
மரு ஆர் கொன்றைச் சடை முடி கொள் வள்ளல் இவர்க்குப் பலி கொடு நான்
ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல்
இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
3. தண் ஆர் மலரை மதி நதியைத் தாங்குஞ் சடையார் இவர்-தமை நான்
அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன்
நண்ணாரிடத்தும் அம்பலத்தும் நடவாதவர் நாம் என்று சொலி
எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
4. பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றிப் பிச்சைத் தேவர் இவர்-தமை நான்
தட்டு இல் மலர்க் கை-இடத்து எது ஓதனத்தைப் பிடியும் என்று உரைத்தேன்
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி
எட்டி முலையைப் பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
5. மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான்
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன்
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என்
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
6. மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான்
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன்
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி
என்றன் முலையைத் தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
7. கோமாற்கு அருளும் திருவொற்றிக் கோயில்_உடையார் இவரை மத_
மா மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடைத்
தாம் மாற்றிடக் கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
8. அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன்
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார்
செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
9. கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம்
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன்
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அப் பலி யாது என்றேன் நின்
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
10. ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன்
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும்
ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
11. அடுத்தார்க்கு அருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்-தாம் மிகத் தாகம்
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன்
கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
12. இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன்
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல்
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
13. தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம்
அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட
முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம்
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
14. மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன்
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே
ஏறா வழக்குத் தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
15. வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார்
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன்
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம்
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
16. திருவை அளிக்கும் திருவொற்றித் தேவரீர்க்கு என் விழைவு என்றேன்
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார்
தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல்
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
17. முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கிக்
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்குக் கந்தை உளது
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
18. துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன்
நென்னல் இரவில் எமைத் தெளிவான் நின்ற நினது பெயர் என்றார்
உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல்
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
19. சிமைக் கொள் சூலத் திரு_மலர்_கைத் தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன்
எமைக் கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார்
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ
இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
20. நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ
திடம் கொள் புகழ்க் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்காக்
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
21. சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன்
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார்
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும்
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
22. துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும்
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தைப் பறித்தது என்றார்
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
23. உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார்
விடைக்குக் கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிகக் கற்றவர் என்றேன்
இடக்குப் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
24. மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன்
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என
அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
25. ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன்
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது
இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
26. கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவைப் பெயர் வேண்டினம் படைத்தால்
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன்
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
27. சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வப் பெருமான் இவர்-தமை நான்
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ
கோடாகோடி முகம் நூறு கோடாகோடிக் களம் என்னே
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
28. துருமம் செழிக்கும் பொழில் ஒற்றித் தோன்றால் இங்கு நீர் வந்த
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமைத்
தருமம் பெறக் கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல்
இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
29. ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றித் தேவர் இவர்-தமை நான்
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன்
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
30. திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண்
இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
31. வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான்
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோலச் சடையீர் அழகு இது என்றேன்
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
32. பலம் சேர் ஒற்றிப் பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன்
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன்
வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
33. வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார்
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார்
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
34. பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய்ச்
சீர் வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன்
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம்
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
35. பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான்
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடைக் காழ்
இரும் சீர் மணியைக் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
36. வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு
கலந்து அங்கு இருந்த அண்டசத்தைக் காட்டி மூன்று விரல் நீட்டி
நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய்
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
37. தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய்
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-
தான் ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடி
யேன் நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
38. செச்சை அழகர் திருவொற்றித் தேவர் இவர் வாய் திறவாராய்
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அக் கரம் வைத்தார்
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமைக் காட்டி
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
39. மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார்
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன்
இன் தாமரைக் கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
40. வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார்
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையைக் குறிப்பித்தார்
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
41. செங்கேழ் கங்கைச் சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார்
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என்
அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறைப் போது அமர்ந்து எழுந்தே
இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
42. கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார்
தொடை ஆர் இதழி மதிச் சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன்
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே
இடையாக் கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
43. பொன்னைக் கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
முன்னைத் தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உணச் செய்யாள்
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
44. வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான்
செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும்
வியலாய்க் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும்
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
45. பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன்
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி
எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
46. இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொலும் என்றேன்
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
47. பாற்றக் கணத்தார் இவர் காட்டுப்பள்ளித் தலைவர் ஒற்றியின்-நின்று
ஆற்றப் பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன்
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ்ப் பள்ளி
ஏற்றுக் கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
48. குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன்
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்துக் காட்டும் என்றேன்
வரு காவிரிப் பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ்
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
49. வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார்
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
50. உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
51. தண் கா வளம் சூழ் திருவொற்றித் தலத்தில் அமர்ந்த சாமி நும் கை
எண் கார்முகம் மாப் பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார்
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
52. செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும்
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார்
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டுப் பெயர் என்றே
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
53. விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில்
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்க்_கை வண்டும் விழுந்தது என்றார்
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
54. மட்டு ஆர் மலர்க் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன்
எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
55. ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன்
பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார்
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம்
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
56. வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன்
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான்
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்றே
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
57. தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன்
ஈது நமக்குத் தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன்
ஓதும் அடியார் மனக் கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
58. ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர்
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கைப் பன்மை நாதர் என்றார்
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
59. ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன்
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர்
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
60. பேர் ஆர் ஒற்றியீர் உம்மைப் பெற்றார் எவர் என்றேன் அவர்-தம்
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என்
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
61. தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான
ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன்
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே
எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
62. ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன்
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிகத்
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
63. மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான்
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார்
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் எனத் திருவாய்
இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
64. வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன்
குளம் சேர் மொழிப் பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால்
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
65. வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார்
சாற்றாச் சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
66. புயப் பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார்
வயப் பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன்
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
67. தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன்
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார்
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
68. உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன்
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார்
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
69. ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்குச்
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர்-தாம்
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
70. வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன்
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரைக் காணின் அது
உருத் தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று
இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
71. மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன்
செய்ய அதன் மேல் சிகரம் வைத்துச் செவ்வன் உரைத்தால் இரு வா என்று
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
72. தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை
மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன்
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
73. என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல்
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல்
அல் மேல் குழலாய் சேய் அதன் மேல் அலவன் அதன் மேல் ஞாயிறு அஃ
தின் மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
74. வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன்
மயலாய் இடும் இப் பெயர்ப் பின்னர் வந்த இளைய நாமம் என்றார்
செயல் ஆர் காலம் அறிந்து என்னைச் சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
75. நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன்
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலைத் தோல் வல்லீர் நீர் என்றேன்
வேல் ஆர் விழி மாப் புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
76. முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன்
கடியா உள்ளங்கையின் முதலைக் கடிந்தது என்றார் கமலம் என
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே
இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
77. ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர்
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான்
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன்
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
78. வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர்
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர் காண்
ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய்
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
79. பற்று முடித்தோர் புகழ் ஒற்றிப் பதியீர் நுமது பசுவின் இடை_
கற்று முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன்
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
80. வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
81. ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால்
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன்
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம்
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
82. கரு மை அளவும் பொழில் ஒற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கம் அறப்
பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார்
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால்
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
83. ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே மயக்குகின்ற
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காமப்
பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்துக் காட்டுதியேல்
இசையக் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
84. கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர்
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார்
அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
85. சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாகரே நீர் திண்மை_இலோர்
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார்
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல்
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
86. ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும்
பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலைப் பருவத்தில்
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமைப் பாலர் யாம் என்றே
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
87. வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என்
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார்
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல்
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
88. தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனைப் போல் நினைத்து என் மனை அடைந்தீர்
உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன்
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனைத் தேர்ந்து அன்றே
இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
89. ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன்
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ்
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
90. கனி மான் இதழி முலைச் சுவடு களித்தீர் ஒற்றிக் காதலர் நீர்
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும்
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன்
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
91. சிறியேன் தவமோ எனைப் பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர்
அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன்
பொறி நேர் உனது பொன் கலையைப் பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
92. அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்பத் திரம் என்றேன்
விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ
எளிக் கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
93. வாசம் கமழும் மலர்ப் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர்
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார்
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யா
மே சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
94. பேசும் கமலப் பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம்
கூசும்படி இப்படி ஒற்றிக் கோவே வந்தது என் என்றேன்
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
95. கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம்
படி ஆல் அடியில் இருந்த மறைப் பண்பை உரைப்பீர் என்றேன் நின்
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம்
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
96. என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர்
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன்
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
97. நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர்
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன்
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
98. மறி நீர்ச் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர்
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன்
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய்
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
99. ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன்
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ
பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
100. விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன்
பழி அன்று அணங்கே அ வேய்க்குப் படு முத்து ஒரு வித்து அன்று அதனால்
இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
101. விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாசத்
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்கத் தருதல் வேண்டும் எனக்கு என்றேன்
பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணாப் பகைவரேனும் இதை
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
102. செம்பால் மொழியார் முன்னர் எனைச் சேர்வீர் என்கோ திருவொற்றி
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன்
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
103. மைக் கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன்
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே
துய்க்கும் மடவார் விழைவர் எனச் சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ
எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
104. ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான்
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன்
நாறும் மலர்ப் பூங் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
105. வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணிச் சடையின்
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின்
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
106. உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர்
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன்
மெள்ளக் கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை
எள்ளப் புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
107. அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன்
விச்சை அடுக்கும்படி நம்-பால் மேவினோர்க்கு இ அகில நடைப்
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
108. அள்ளல் பழனத் திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி
வெள்ளச் சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன்
கொள்ளக் கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும்
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
109. விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன்
கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே
வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம்
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
110. அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன்
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின்
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
111. விச்சைப் பெருமான் எனும் ஒற்றி விடங்கப் பெருமான் நீர் முன்னம்
பிச்சைப் பெருமான் இன்று மண_பிள்ளைப் பெருமான் ஆம் என்றேன்
அச்சைப் பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள்
இச்சைப் பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
112. படை அம்புயத்தோன் புகழ் ஒற்றிப் பதியீர் அரவப் பணி சுமந்தீர்
புடை அம் புயத்தில் என்றேன் செம்பொன்னே கொடை அம்புயத்தினும் நல்
நடை அம்புயத்தும் சுமந்தனை நீ நானா அரவப் பணி மற்றும்
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
113. கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன்
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடைக் கீழ்ப்
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணிப் பாம்பு அது போல் பாம்பு அல என்று
ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
114. புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன்
கயல் சூழ் விழியாய் தனத்தவரைக் காணல் இரப்போர் எதற்கு என்றார்
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல்
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
115. நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன்
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என்
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.
116. கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன்
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசியப்
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளிக் குலம் எல்லாம் உடையேம்
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
117. நலமாம் ஒற்றி_உடையீர் நீர் நல்ல அழகர் ஆனாலும்
குலம் ஏது உமக்கு மாலையிடக் கூடாது என்றேன் நின் குலம் போல்
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
118. மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர்
புதல்வர்க்கு ஆனைப் பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலிக் குலமாம்
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள்
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
119. தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தைப்
பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன்
ஆமா குலத்தில் அரைக் குலத்துள் அணைந்தே புறம் மற்று அரைக் குலம் கொண்டு
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
120. அனம் சூழ் ஒற்றிப் பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே
மனம் சூழ் தகரக் கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறியத்
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகரத் தலை கொண்டாய்
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
121. பங்கேருகப் பூம் பணை ஒற்றிப் பதியீர் நடு அம்பரம் என்னும்
அங்கே ஆட்டுக் கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல்
இங்கே ஆட்டுத் தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால்
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
122. மாணப் புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனைக்
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன்
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு
ஏணப் புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
123. நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய
அல்லால் அவண் உம்முடன் வருகோ அணையாது அவலத் துயர் துய்க்கோ
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள்
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
124. ஆட்டுத் தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர்
ஆட்டுத் தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல
ஆட்டுத் தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
125. ஒற்றிப் பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில்
கொற்றக் கமலம் விரிந்து ஒரு கீழ்க் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன்
பொற்றைத் தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது
எற்றைத் தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
126. இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன்
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார்
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின்
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
127. உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ
நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தைக்
கடையார் எனக் கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
128. என் ஆர்_உயிர்க்குப் பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும்
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன்
முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
129. பெரும் தாரணியோர் புகழ் ஒற்றிப் பெருமான் இவர்-தம் முகம் நோக்கி
அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன்
வருந்தாது இங்கே அருந்து அமுத மனையாளாக வாழ்வினொடும்
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
130. செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழாக் கரித் தோல் உடுத்தீரே
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்கக் கலை உண்டோ என்றேன்
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில்
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
131. கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர்
இற்றைப் பகலே நன்று என்றேன் இற்றை இரவே நன்று எமக்குப்
பொற்றைத் தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய்ப் புத்தமுதம்
இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
132. கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை
விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்கத் துணிந்தீரோ என்றேன்
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையைக் கவர்ந்து களத்
தில் தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
133. உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும்
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும்
உடுக்கும் பெரியவரைச் சிறிய ஒரு முன்தானையால் மூடி
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
134. கா வாய் ஒற்றிப் பதி_உடையீர் கல்_ஆனைக்குக் கரும்பு அன்று
தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன்
பாவாய் இரு கல் ஆனைக்குப் பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
135. ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும்
தீட்டும் புகழ் அன்றியும் உலகைச் சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய்
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
136. கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன்
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரைக் காண் போதும்
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய்
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
137. ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான்
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன்
வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை
ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
138. உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றிப் பெருமான் உம் புகழைக்
கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ
மற்ற இடச் சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல்
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
139. யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன்
மான் செய் விழிப் பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்
தேன் கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
140. கருணைக் கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ்
வருணப் பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணையத்
தருணப் பருவம் இஃது என்றேன் தவிர் அன்று எனக் காட்டியது உன்றன்
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
141. காவிக் களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என்
ஆவித் துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன்
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் எனக் கேட்டு உன்
ஈவைக் கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
142. கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர்
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன்
வண்ணம் உடையாய் நின்றனைப் போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
143. தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னைக் கலந்தும் திருவொற்றி
ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன்
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவிக் கலந்து மலர்த் தளியில்
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
144. அம்மை அடுத்த திரு_மேனி அழகீர் ஒற்றி அணி நகரீர்
உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன்
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
145. உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன்
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும்
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
146. வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர்
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளைக் கொண்டீர் கொள்கை என் என்றேன்
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிடச் சற்றும்
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
147. கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர்
பெரும் பை அணியீர் திருவொற்றிப் பெரியீர் எது நும் பெயர் என்றேன்
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் எனச் சூழ்வர்
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
148. நிலையைத் தவறார் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் நீர் முன்னம்
மலையைச் சிலையாக் கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன்
வலையத்து அறியாச் சிறுவர்களும் மலையைச் சிலையாக் கொள்வர்கள் ஈது
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
149. உதயச் சுடரே_அனையீர் நல் ஒற்றி_உடையீர் என்னுடைய
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன்
சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம்
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
150. புரக்கும் குணத்தீர் திருவொற்றிப் புனிதரே நீர் போர்க் களிற்றை
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன்
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனை நின்
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
151. பதம் கூறு ஒற்றிப் பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான்
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன்
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய்
இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
152. யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம்
தாகம் உடையார் இவர்-தமக்குத் தண்ணீர் தர நின்றனை அழைத்தேன்
போகம்_உடையாய் புறத் தண்ணீர் புரிந்து விரும்பாம் அகத் தண்ணீர்
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
153. வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம்
உள நீர்த் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான்
குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
154. மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார்
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன்
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
155. சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும்
கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து வருவீர் என் என்றேன்
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
156. ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்கத் துணிவுற்றீர்
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன்
சோற்றால் இளைத்தேம் அன்று உமது சொல்லால் இளைத்தேம் இன்று இனி நாம்
ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
157. நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும்
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது
காரை விழுங்கும் எமது பசுக் கன்றின் தேரை நீர்த் தேரை
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
158. பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன்
இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல்
மின்னே நினது நடைப் பகையாம் மிருகம் பறவை-தமைக் குறிக்கும்
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
159. அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்றுக்
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன்
உடையாத் தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
160. தேவர்க்கு அரிய ஆனந்தத் திரு_தாண்டவம் செய் பெருமான் நீர்
மேவக் குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன்
தாவக் குகுகுகுகுகுகுகுத் தாமே ஐந்தும் விளங்க அணி
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
161. கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான்
ஒன்றப் பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன்
நன்று அப்படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய் நீ
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
162. புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும்
உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன்
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரைக் கண்டிடில் பயந்தே
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
163. தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல்
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின்
அ ஊர்த் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர்
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
164. மணம்கொள் இதழிச் சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின்
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார்
அணங்கின் மறையூராம் என்றேன் அஃது அன்று அருள் ஓத்தூர் இஃது
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
165. ஆற்றுச் சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன்
சோற்றுத்துறை என்றார் நுமக்குச் சோற்றுக் கருப்பு ஏன் சொலும் என்றேன்
தோற்றுத் திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப
ஏற்றுத் திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.
166. ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல்
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன்
ஏங்கும்படி நும் இடைச் சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால்
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.