live

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வடலூர் மாதபூசம் ஜோதி தரிசனம் 10-03-2025 இரவு 7.45 முதல் 8.45 வரை சத்திய ஞான சபையில் காட்டப்படும். ஜோதி தரிசனத்தை நேரலையில் கண்டு இறைவனை உள்ளம் உருகி வழிபாடு செய்வோம்.

வடலூர் ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஐந்து திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். தைப்பூசம் அன்று வருடத்தில் ஒரு நாள் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது, இதை காண தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும்,  வாழும் சமரச சுத்த சன்மார்க்க  பக்தர்கள் வடலூருக்கு பல லட்சக்கணக்கான பேர் வந்து தரிசனம் செய்கின்றார்கள்.

   “சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன்என அருட்பிரகாச வள்ளலார் தன் அகத்தே கண்ட ஞான அருள் அனுபவத்தை உலகருக்கு காட்டவே சத்திய ஞான சபையை கட்டி ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனமும் காண்பித்தார்.

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடை அன்பே

என்று அருட்பிரகாச வள்ளலார் பாடியுள்ளார்கள். (திருவருட்பா அகவல் வரி1480) இவ்வரிகளை ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளல் மலரடி வாழ்க..!